மாஸ்கோ: ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ரஷ்யாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந் நாட்டு சுகாதாரத் துறை 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று விவரங்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, புதியதாக 26,683 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 22,69,316 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோவில் 6,798 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் 459 பேர் உயிரிழக்க, ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 39,527 ஆக உயர்ந்துள்ளது. 17,61,457 பேர் குணமடைய 4,68,332 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel