மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவுக்கு மேலும் 491 பேர் பலியாகி உள்ளனர்.

 

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 2ம் இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதிக கொரோனா நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,326 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,38,828 ஆக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 491 பேர் உயிரிழக்க, அங்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 031 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 16,34,671 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4,67,126 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,300 பேர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]