மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் 11,823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா 2ம் அலை எதிரொலியாக ரஷியாவில் அதன் பாதிப்புகள் ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
அதன்படி புதியதாக 11,823 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து நாட்டில் ஒட்டு மொத்த பாதிப்பு 41,89,153 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதியதாக 1,198 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 417 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 84,047 ஆக உயர்ந்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel