ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா விமானங்கள் சேதமடைந்தது இந்த தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டதாகத் தெரிவித்தது.
இந்த நிலையில், ரஷ்யா மீதான தாக்குதலில் CIA மற்றும் MI6 – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறை நிறுவனங்களின் நேரடி தொடர்பு இருப்பதாக ரஷ்யா சந்தேகிப்பதாக எஸ்கோபர் தெரிவித்துள்ளார்.

தற்போது ரஷ்யாவில் செய்தி சேகரித்து வரும் எஸ்கோபர், ரஷ்யா-வின் அணு ஆயுதம் தொடர்பான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேச போர் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பின் தாக்குதல் முறையை ஒத்துள்ளதாகவும், இந்த உளவு அமைப்புகள் அனைத்தும் இதில் ஒன்றிணைந்து பணியாற்றியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ரஷ்யா இதில் டிரம்பின் நேரடி தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கான பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், அணு ஆயுத போர் ஒப்பந்தங்களை உட்பட்டு நடக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரஷ்யா, உக்ரைன் நடத்திய தாக்குதலை விட பலமடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எஸ்கோபரைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதலின் மிகவும் ஆபத்தான அம்சம், பனிப்போருக்குப் பின்னர் நீடித்த, சமநிலையை வேண்டுமென்றே சீர்குலைப்பதாகும்.
அணு ஆயுதங்களை பரஸ்பரம் கண்காணிப்பதற்கு வழிவகுத்த புதிய START ஒப்பந்தம் இதனால் சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல், மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் ஒரு எளிய ட்ரோன் தாக்குதல் கூட, ஒரு வல்லரசின் அணுசக்தி சொத்துக்களைத் தாக்கும் என்பதைக் காட்டுகிறது, இது சர்வதேச பாதுகாப்பு சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
மேலும், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் இறந்தவர்களின் உடலை ஒப்படைப்பது தவிர வேறு எந்த முக்கிய முடிவும் எடுத்தப்படவிவில்லை.
இந்த நிலையில், தங்கள் ராணுவ நிலைகள் மீதான தாக்குதலால் பொறுமையிழந்துள்ள ரஷ்யா இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகளின் தொடர்பை உறுதிப்படுத்திய பின் அந்நாடுகள் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அது உலக ஒழுங்கை பெரிதும் பாதிக்கும் என்றும் எஸ்கோபர் எச்சரித்துள்ளார்.