மாஸ்கோ : விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கியுள்ள 3 வீரர்கis  பூமிக்கு அழைத்து வரும் வகையில்,  மாற்று விண்கலத்தை நாசா அனுப்பி உள்ளது.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் ரஷியா, அமெரிக்க உள்பட சில நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.  அதன்படி கடந்த ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் MS-22 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி வீரர் Francisco Rubio, ரஷ்ய விண்வெளி வீரர்கள் Sergey Prokopyev, Dmitry Petelin ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிசம்பர் 14ம் தேதி திடீரென விண்கலத்தின் கூலண்ட் பகுதியில்  கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கசிவு விண்கல்   மோதியதால் பழுது ஏற்பட்டு இருக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.  கசிவு ஏற்பட்டதை அடுத்து வீரர்களின், விண்வெளி நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் விண்வெளியில் சிக்கியுள்ள 3 வீரர்களை பூமிக்கு அழைத்து சோயுஸ் MS-23 என்ற மாற்று விண்கலத்தை  ரஷியா செலுத்தி உள்ளது.

Soyuz MS-23 என்று அழைக்கப்படும் காப்ஸ்யூலின் லிஃப்ட்ஆஃப், ரஷ்யாவின் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோம் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 7:24 மணிக்கு நடந்தது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 5:24 மணிக்கு ஏவப்பட்டுள்ளது.

இந்த  ஆளில்லாத  விண்கலம் சுற்றுப்பாதையில் சுமார் இரண்டு நாட்கள் சுற்றி வந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிக்கும். வரும் ஞாயிறன்று, இது விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைக்கப்படும்  செய்யும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த Soyuz MS-23 ஆனது விண்வெளி வீரர்களான Sergey Prokopyev மற்றும் Dmitri Petelin மற்றும் NASA விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ ஆகியோரை அழைத்துக்கொண்டு திரும்பும் வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.