மாஸ்கோ

த்தார் நாட்டுக்கு ரம்ஜானை முன்னிட்டு உணவுப் பொருட்கள் அனுப்புவதன் மூலம் தன்னை ஒரு இஸ்லாமிய நட்பு நாடாக  காட்டு முற்படுகிறது..

பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் ஆண்ட்ரூ கோரைப்கோ ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டதாவது “

கத்தார் நாட்டை மற்ற முக்கிய அரேபிய நாடுகள் ஒதுக்கி வைத்துள்ளது.

யூ ஏ இ கத்தார் நாட்டுக்கு ஆதரவாக எந்த ஒரு பதிவு வந்தாலும் அந்த ஊடகம் அல்லது தனி நபருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்போது ரம்ஜான் மாதம் நடைபெற்று வருகிறது,

கத்த்தார் புகழ்பெற்ற மசூதிகள் நிறைந்த நாடு.

வழக்கமாக் ரம்ஜான் மாதத்தில் கத்தார் நாட்டு மசூதிகளுக்கு, உணவுப் பொருட்கள் அனுப்புவது பல இஸ்லாமிய நாடுகளின் வழக்கமாக இருந்தது.

ஆனால் தடை காரணமாக கத்தாருக்கு எந்த நாடும் உணவுப் பொருட்கள் அனுப்ப முடியதில்லை.

தற்போது ரஷ்யா கத்தாரில் உள்ள மசூதிகளுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப் முன்வந்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் ரஷ்யா தன்னை ஒரு இஸ்லாமிய நண்பன் என காட்ட நினைக்கிறது.

இது மற்ற இஸ்லாமிய  நாடுகளின் மனதில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறது.

இவ்வாறு அந்த பத்திரிகையாளார் கூறி உள்ளார்