மாஸ்கோ:

ரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீட்டெடுப்பதில் ரஷ்யா மிகவும் ஆர்வமாக உள்ளது, ஆனால் அது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறது என கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி டிமிட்ரி பெஸ்கோவ் ஒரு தினசரி செய்தி மாநாட்டில் பேசியதாவது: ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை ரஷ்ய ஒருபோதும் முடித்துக் கொள்ள விரும்பவில்லை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது முடிந்துவிட்டது, ஆனால் தற்போது இந்த உறவை நாங்கள் மீண்டும் புதுப்பிக்க விரும்புகிறோம் என டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒருவருடைய நலனில் மற்றொருவர் தலையிடுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், மேலும் இது தொடர்பாக நாங்கள் தீர்க்கமாக செயல்படுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.