ரஷ்யா-வில் எதிர்கட்சி தலைவர் நவல்னிக்கு ஆதரவாக, கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
நவல்னிக்கு வழங்கப்பட்ட பரோல் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்காக அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா, அரசு அனுமதி பெறாத போராட்டங்களில் தூதரக அதிகாரிகள் பங்கெடுத்ததாக கூறி, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நாட்டு தூதர்களை அழைத்து தங்களது கண்டனத்தை பதிவு செய்த ரஷ்யா அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதே வேளையில், போலந்து அரசு அந்த நாட்டில் உள்ள ரஷ்யா தூதரை அழைத்து ரஷ்யா-வின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.