உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷ்யா கொத்து குண்டுகளை வீசித் தாக்கியது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை போரை அதிகரிக்கும் வெறுக்கத்தக்க செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Tu-95 ரக குண்டுகளை ரஷ்யா வீசப்போவது தொடர்பாக நாடு முழுவதும் வான்வழி தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை உக்ரைன் விடுத்திருந்தது.

இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த இந்த கொத்து வெடிகுண்டு தாக்குதலில் கியேவ், கார்கிவ், மைகோலேவ், ஒடேசா, லுட்ஸ்க் மற்றும் ரிவ்னே உள்ளிட்ட பல நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிளஸ்டர் வெடிமருந்துகளுக்கான மாநாடு (CCM) இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கையிருப்பு, பரிமாற்றம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றைத் தடைசெய்துள்ளது இருந்தபோதும் ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ இதில் கையொப்பமிடவில்லை.

உக்ரைன் மீதான இந்த கிளஸ்டர் குண்டு வீச்சில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் முற்றிலும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.