பியோங்யாங்

ஷ்ய நாட்டு வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்று  வட கொரிய அதிபரை சந்தித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நடந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பாடுபட்டு வருகின்றன.   இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க இருந்தனர்.   ஆனால் அந்த சந்திப்பை ரத்து செய்வோம் என வட கொரியா மிரட்டியதால் அமெரிக்க அதிபர் ரத்து செய்து விட்டார்.

தற்போது  இரு அதிபர்களையும் சந்திக்க வைக்க மீண்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன.   இந்நிலையில் ரஷ்ய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் வட கொரியா சென்றுள்ளார்.   அங்கு அவர்  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.   அப்போது அவர் கிம் மை ரஷ்யா வருமாறும் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ரஷ்யா தேவையான உதவிகளைச் செய்யும் என அறிவித்த செர்ஜி, ரஷ்ய அரசின் சார்பாக ஒரு பெட்டியை பரிசாக அளித்துள்ளார்.    அந்தப் பெட்டியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.    அமெரிக்காவுக்கு எப்போதுமே எதிரியாக உள்ள ரஷ்யா தற்போது வட கொரியாவுடன் நல்லுறவு கொள்வதை உலக அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவதித்து வருகின்றனர்.