மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

‘கர்ணன்’ என்ன மாதிரியான கதைக்களம் என்பது குறித்துப் படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை. ட்ரெய்லரில் தெரிந்துவிடும் என்று பலரும் கருதினார்கள். ஆனால், படக்குழுவினரோ ட்ரெய்லரே வேண்டாம், நேரடியாக வெளியீட்டுக்குச் செல்வோம் என முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கர்ணன் முழு படம் இரண்டு மணி நேரம் முப்பத்தி எட்டு நிமிடங்கள் என அறிவித்துள்ளது படக்குழு .

[youtube-feed feed=1]