கோலாலம்பூர்:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசியா அரசு ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை ரஷ்யாவில் நடக்கிறது. மொத்தம் 64 போட்டிகள் நடக்கிறது. இதில் 41 போட்டிகளை இலவசமாக மலேசியாவில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு நிறுவனமான ரேடியோ மற்றும் டெலிவிஷன் (ஆர்டிஎம்) முடிவு செய்துள்ளது.
‘‘41 போட்டிகளில் 27 போட்டிகள் நேரலையாகவும், 14 போட்டிகள் சற்று காலமாதத்துடன் ஒளிபரப்பு செய்யப்படும்’’ என்று அந்நாட்டு தொலை தொடர்ந்து மற்றும் மல்டி மீடியா துறை அமைச்சர் கோபிந் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
இதற்காக 4 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சரவைக்கு தியோ கடிதம் எழுதியுள்ளார். ‘‘உண்மையான செலவு தொகை எவ்வளவு என்பது பின்னர் அறிவிக்கப்படும். விளம்பர நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதனால் தொகை குறையும் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.