டெல்லி:
 ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என  காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.  அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முடங்கியதுடன், சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம்  இன்று காலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒரு சில வெற்றிக்களும் கிட்டியுள்ளருது, அவற்றை நாம் பாராட்ட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், போதிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத போதிலும்: தலைமை தாங்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டும்

எல்லோரும் சேர்ந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்தில் பாஜக வெறுப்பு மற்றும் வகுப்புவாத சார்பு வைரஸை பரப்புகிறது:

மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மிகத் தேவைப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும் லட்சக்கணக்கான குடிமக்கள், அவர்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் நம் அனைவருக்கும் உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது

 ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்.
முதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன, அதை நிவர்த்தி  செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில் வெறுப்பு வைரஸை பா.ஜ.க. பரப்புகிறது
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.