கோவை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர், அதில் சுமார் ரூ. 7 லட்சம் ரூபாய் வரை இழந்த நிலையில், மனமுடைந்து, ரயில் முன் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இணையதளம் மூலம் ஏராளமானோர் அதில் விளையாடி பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரிய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் பரவின.
அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய ரயில்வே காவல்துறையினர், அவரு பெயர் எல்வின் பிரட்ரிக் என்பதும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த இளைஞர், கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும தெரிய வந்தது.
இந்த ஆன்லைன் ரம்பியில் வெறித்தனமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான பணத்தை இழந்த நிலையில், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த இளைஞர் திருப்பூர் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். விசாரணையில், அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைனில் இழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.