சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 67 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியன் வங்கியில் வாங்கிய கடனுக்காக 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும்,  235 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன்  மீது, வாங்கிக கடனை திருப்பி செலுத்தவில்லை என்று,  இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி கே.எல்.குப்தா சிபிஐயிடம் கடந்த  ஆண்டு மே மாதம் புகார் கொடுத்தார். அவரது புகாரில்,  கடந்த 2017ஆம் ஆண்டு கமர்ஷியல் ஷோரூம் வாங்குவதற்காக 150கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், மேலும் 90கோடி ரூபாய் கடனையும் அதே ஆண்டு வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும், இரண்டாவதாக பெறப்பட்ட 90கோடி ரூபாய் கடன் மூலம் ஷோரும் வாங்கப் பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வங்கியின் தலைமை மேலாளர் செல்வம் மற்றும் துணை பொதுமேலாளர் தமிழரசு ஆகியோர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ, கடந்த ஆண்டு ரெய்டு நடத்தி கடைக்கு சீல் வைத்தது. மேலும், வங்கியில் கடன் பெறுவதற்காக கூறப்பட்ட காரணங்களுக்காக பணத்தை பயன்படுத்தாமல், வேறு தொழிலில் முதலீடு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இந்தியன் வங்கியில் வாங்கிய 150 கோடி ரூபாய்க்காக சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கடந்த ஜூலை மாதம்  முடக்கப்பட்டது.  தொடர்ந்து,  சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டது.

அதுபோல தற்போது , ஆக்சிஸ் வங்கியில் 66 கோடியே 93 லட்சம் பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.67 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.