சென்னை: ரூ.6கோடி மோசடியில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் திமுகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கடந்த அதிமுக ஆட்சியின்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தர் நிலோபர் கபில் மீது அவரது உதவியாளரே புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நிலோபர் கபில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதில் சந்ஷோம் தான் பட்டேன். நானாக விலகுவதை விட அவர்களாகவே கழற்றி விட்டிருக்கிறார்கள். என்னை நீக்கியதற்கு பண மோசடி புகார் தான் காரணம் எனில், எடப்பாடி பழனிசாமி மீதும் ஊழல் புகாரை தளபதி ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், நான் திமுகவில் சேரப்போகிறேனா, இல்லையா ? என்பதை விரைவில் தெரியப்படுத்துவேன். எங்கு இருந்தாலும், நான் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்: முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபீல் தெரிவித்துள்ளார்.

இதனால் நிலோபர் கபில் விரைவில் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.