சென்னை: சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2388 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், முக்கவசம் அணியாதவர்கள், கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 2388 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையின் மண்டல அமலாக்கக் குழுக்களால் முகமூடி அணியாததற்காக 2388 நபர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 4லட்சத்துக்கு 96ஆயிரத்து 900அபராதம் (ஏறக்குறைய ரூ.5 லட்சம்) வசூலிக்கப்பட்டுள்ளளது.
கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த கடந்த டிசம்பர் மாதம் 31ந்தேதி முதல் இதுவரை (7ந்தேதி) 10ஆயிரத்து 743 பேரிடம் இருந்து 22,48,700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமான ஆய்வுகளின் போது, தினமும் 5000க்கும் மேற்பட்ட நபர்களிடம், போலீஸ் குழுக்கள் அபராதம் வசூலித்து வருவதாகவும், சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.