திருச்சி: பெஞ்சல்புயல் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம்  வழங்க வேண்டும் என திமுக அரசை கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும்,  ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு ஏதேனும் அஜெண்டா இருக்கலாம் என்றும்  விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய  திருமா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோதிலும் எதிர்மறை கருத்துகளை தெரிவிக்கும் ஆதவ் அர்ஜுனாவிடம் ஏதோ மறைமுக திட்டம் இருக்கலாம் என்று  தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் விசிகவில் இணைந்தவர்தான்  பிரபல தொழிதிபரான ஆதவ் அர்ஜுனா.  இவர் லாட்டரி மாஃபியா மார்ட்டினின் மருமகன் இவர். 2024ம் அண்டு தொடடக்கத்தில்தான் விசிகவில் இணைந்து அதிரடியாக   பதவி பெற்றார்.  ஆதவ் அர்ஜுனாவுக்கு எடுத்த எடுப்பிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி அளித்து திருமா அழகு பார்த்தார். அதற்க நன்றி கடனாக அவரும், விசிகவின் மாநாட்டை பிராண்டமாக நடத்தி அசர வைத்தார். இதனால், கட்சியில் அவருக்கு மவுசு கூடியது. அதே நேரத்தில் பழைய பிரமுகர்கள் அவர்மீது அதிருப்தி அடைந்தனர். இதனால், ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. விசிகவை தொடங்கியபோது திருமாவளவன் மேற்கொண்ட கொள்ளை பிடிப்புகள் குறித்து அதவ் அர்ஜுனா தற்போது பேசி வந்தது, விசிக நிர்வாகிகளிடையேயும், கூட்டணி கட்சிகளின் இடையேயே அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக திமுகவின் வாரிசு அரசியல், ஆட்சியில் பங்கு போன்ற திருமாவின் பழைய கோஷங்களை மீண்டும் ஆதவ் அர்ஜுனா பேசியது திமுக கூட்டணியில் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விசிகவில் உள்ள திமுக ஆதரவாளர்களே   ஆதவ் அர்ஜுனாவுஙககு கடுமையாக விமர்சித்தனர். இந்த பரபரபபான சூழலில்தான் கடந்த வாரம் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது,  அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில், மேடையில் விஜய்யை வைத்துக் கொண்டே திமுகவை அட்டாக் செய்து பேசினார் ஆதவ் அர்ஜூனா.

இதற்கு, திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கனவே, ஆதவ் அர்ஜுனா மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என விசிகவுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்படிப்பட்ட சூழலில், ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதங்களுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.. கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் திமுகவை அவர் தொடர்ந்து சாடி வந்தார்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருமா,  ஆதவ் அர்ஜுனா, இப்படி பேசி வருவதை பார்த்தால் அவருக்கு ஏதோ செயல்திட்டம் இருப்பதுபோல் தெரிகிறது என  சந்தேகம் கிளப்பினார் இடைநீக்கம் என்பது வெறும் கண் துடைப்பு அல்ல. கட்சி நடைமுறை விதிகளின்படி ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கூறிய திருமாவளவன்,

தொடர்ந்து எனது நம்பகத்தன்மை மீதே கை வைக்கிறார்கள். நம்மைப் பற்றியே பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடையவதற்கு இல்லை. அதில் சூது இருக்கிறது. சூழ்ச்சி இருக்கிறது என கூறிய திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக நான் இருக்கேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி , தற்போது என்னை சுற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெறுகிறது. அது நம் மீது வைத்துள்ள மரியாதைக்காக இல்லை. நம்மை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று சக்திகள் சதி அது. திமுகவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று எண்ணும் சக்திகள் திருமாவை ஒரு தூததாக பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள்.

பெஞ்சல்புயல் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம்  வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து பேசியவர், மத்தியஅரசு கொண்டு வரும்,  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரத்தான். ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும், மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பாஜக அரசு கொண்டுவர பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.