அகமதாபாத்:
குஜராத் கடல் எல்லையில் போர்பந்தர் பகுதியில் குஜராத் கடலோர காவல் படை ஏடிஜிபி நடராஜ் தலைமையிலான குழு ஹெலிகாப்டர், ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலில் ஹெராயின் கடத்தல் கப்பலை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 ஆயிரத்து 500 கோடியிலிருந்து 5 ஆயிரம் கோடி ரூபாயாகும். உலகிலேயே இவ்வளவு பெரிய மதிப்பிலான கடத்தலை இதுவரை யாரும் பிடித்ததில்லை.
அதிலும் அதில் தலைமை தாங்கிய ஏடிஜிபி கோஸ்டல் கார்ட் தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரி என்பது பெருமைக்குரிய விஷயம்.