சாமானிய மக்களின் சட்டைப் பையில் உள்ள பணத்தை ஆட்டை போடும் ஜேப்படி வித்தையில் கைதேர்ந்தவர்கள் என்பதை உ.பி. மாநில பாஜக-வினர் நிரூபித்துள்ளனர்.
உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் ‘ராமாயணம்’ டி.வி. தொடரில் ராமராக நடித்த அருண் கோவில்.
இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக தொண்டர்கள் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடைவீதி வழியாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர்கள் கடை ஒன்றில் இருந்த வியாபாரியிடம் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று இரு கைகளையும் உயர்த்தி கோஷம் போடச் சொல்லியுள்ளனர்.
அந்த வியாபாரியும் கையை உயர்த்தி ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் போட்ட நிலையில் அவர் அசந்த சந்தர்ப்பம் பார்த்து அவரது பாக்கெட்டில் இருந்த 36000 ரூபாய் பணத்தை பிக்பாக்கெட் அடித்துச் சென்றுள்ளனர்.
During Bharat Jodo Yatra, @RahulGandhi Ji explained how pick-pocketer works and how Modi-Adani is looting common people.
The same thing happened in Meerut, a person’s pocket was picked during BJP candidate Arun Govil’s rally and he lost ₹36k.
RaGa warning & The incident! pic.twitter.com/giwQ23XWRW
— Shantanu (@shaandelhite) April 22, 2024
இதுகுறித்து அந்த நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வியாபாரியிடம் பாஜக-வினர் இதுபோன்று நூதன முறையில் திருடியது பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும், மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருப்பதை பிடுங்குவதில் பாஜக-வினர் கில்லாடிகள் என்றும் மக்கள் அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தி ஏற்கனவே கூறியதை நினைவு கூர்ந்துள்ளனர்.