சென்னை:
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.1,024 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை நிலையற்று தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துடன் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக் கிறது.
ஜனவரி 1ந்தேதி(2020) அன்று சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.29968 ஆக இருந்தது. ரூ.30ஆயிரத்துக்குள் இருந்த வந்த விலை தொடர்ந்து ஏறி வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் சவரன் ஒன்றுக்கு ரூ.3ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. தற்போது சரவன் தங்கத்தின் விலை ரூ.33 ஆயித்தை தாண்டியுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,153க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33.224க்கு விற்கப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.10க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,100க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு வருவது நடுத்தர மற்றும், ஏழை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.