மும்பை:
எஸ்பிஐ சேவை கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது ரூ. 25 கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே அட்டை பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கி கிளையில் பணம் எடுத்தால் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு முறையும் ரூ.50 சேவைக் கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும். ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது பிற வங்கியின் ஏ.டி.எம் மையத்திலிருந்து எஸ்.பி.ஐ அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்தால் ரூ.20 கட்டணமாகவும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
வங்கி முகவர்கள் மூலம் டெபாசிட் செய்யப்படும் ரூ. 10 ஆயிரம் தொகைக்கு 0.25 சதவீத கட்டணமும், குறைந்தது ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரை சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படும். அதேபோல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.
ரூ.2 ஆயிரம் பணம் எடுத்தால் 2.50% சேவை கட்டணம் மற்றும் குறைந்தபட்சமாக ரூ.6 வரை சேவை வரியும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.