டெல்லி: ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கா காரணமாக இருந்த அட்டர்னி ஜெனரல் திடீரென பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். இது உலக அரசியலில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்க குற்றப்பத்திரிகையின்மீது அதானியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கும் வகையில், நீதிமன்றத்தல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தி அதிபர் ஜோபைடனால் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் பிரியோன் பீஸ் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் சூரிய மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர அதானி முன்வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அதாவது, தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, 263 மில்லியன் டாலர்கள் அதாவது 2029 கோடி ரூபாய் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாநில மின்சார விநியோக நிர்வாகங்களுடனான சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 2020ம் ஆண்டும் முதல் 2024ம் ஆண்டுவரை பெரும் தொகை இதற்காக கைமாற்றப்பட்டுள்ளது என்கிறது அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை.
இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்திய அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையில், லஞ்சத்தொகையை அமெரிக்க நிர்வாகிகளும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் பாதி பாதி வழங்கியதாக அமெரிக்க குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இவர்களின் திட்டப்படி மாநில மின் விநியோக நிறுவனங்கள் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். குற்றப்பத்திரிகையில், அட்டர்னி ஜெனரல், பிரியோன் பீஸ் [breon peace] [53 வயது] சதியில் ஈடுபட்டவர்கள் லஞ்சம் வழங்கியதை மறைக்க கோட்-வேர்ட்களைப் (Code Word) பயன்படுத்தியது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதானியை “நியூமெரோ யூனோ” அல்லது “பிக் மேன்” எனக் குறிப்பிட்டு செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.
அமெரிக்க நிர்வாகியான அஸூர் பவரில் 2019 முதல் 2022 வரை ரஞ்சித் குப்தா சி.இ.ஓ-வாக இருந்தார். 2022-23 ஆண்டுகளில் ரூபேஷ் அகர்வால் பதவியேற்றி ருந்தார். இந்த தலைமை மாற்றம் சில சிக்கல்களை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டுள்ள திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஊழியர்கள் சிலர் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
லஞ்சம் வழங்குவது குறித்து பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர். லஞ்சம் வழங்கியதில் கௌதம் அதானிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் இதை மறுத்துள்ளது.
இந்த நிலையில், அதானி குழும வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அட்டர்னி ஜெனரல் பிரியோன் பீஸ் [breon peace] [53 வயது] பதவி விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் புதின் இந்தியாவுக்கு எதிராக சிலருடன் கூட்டணி அமைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுவரும் நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதானி விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த காரணமாக இருந்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகலை அறிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார். இவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், திடீரென பதவி விலகல் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே விவாதப்பொருளாகி உள்ளது.
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளமாநில அரசுகள்:
இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள், 20 ஆண்டுகளில் வரிக்குப் பிந்தைய லாபமாக 200 கோடி டாலர்கள் (₹16,800 கோடி) ஈட்டக்கூடியவை. மேற்கண்ட ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் தருவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2020 முதல் 2024 வரை பல முறை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் குழு முன்பு அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் முக்கியக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அதில், இந்திய மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று 8 கிகா வாட் மின்சாரத்தையும், அமெரிக்க நிறுவனம் ஒன்று 4 கிகா வாட் மின்சாரத்தையும் இந்தியாவின் ஒன்றிய அரசு நடத்தும் இந்திய சூரிய மின்சக்தி கழகத்துக்கு நிலையான கட்டணத்தில் வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளன. இதில், அமெரிக்க நிறுவனமானது மொரீஷியசில் பதிவு செய்யப்பட்டது. இதன் பங்குகள், 2023 நவம்பர் வரை நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து நிலையான கட்டணத்தில் மின்சாரத்தை வாங்கும் இந்திய சூரிய மின்சக்திக் கழகம், அதனை மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு விற்கும். இதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர். இதற்காக, 2020 முதல் 2024 வரை தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவுதம் அதானி சந்தித்துள்ளார் என, அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோல், முதலீட்டாளர்களை நம்பவைத்து ஏமாற்றியதாக கவுதம் அதானி, சாகர் அதானி, சிரில் கேபன்ஸ் ஆகியோர் மீது அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது
இந்தக் குற்றச்சாட்டுக்களின் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், அமெரிக்க அரசு மற்றும் பங்குச்சந்தை ஆணையங்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை என, அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு அரசு பெயரும் இடம்பெற்றுள்ளது. அதானிக்கு எதிராக பேசி வரும் தமிழகம் உள்பட சில காங்கிரஸ் மாநில அரசுகளும், அதானியிடம் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, “ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான் காலகட்டத்தில் ஒடிசா, ஜம்மு காஷ்மீர், தமிழ் நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம், SECI-யுடன் எரிசக்தி விற்பனை ஒப்பந்தத்தில் (PSA) கையெழுத்திட்டன.
ஆந்திர மாநிலம் டிசம்பர் 1,2021 அன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆந்திர மாநிலம் 7 GW மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டது. மேலும், இந்த ஒப்பந்தத்தை ஆந்திரா ஏற்படுத்த, அம்மாநில அரசுக்கு ரூ.1750 கோடி (200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாக வழங்க முடிவு செய்யப்பட்டது” என்று அமெரிக்காவின் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது
மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கும்போதெல்லாம், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், அதானிக்கே லாபகரமான பெரிய திட்டங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படுகின்றன, அதானி குழும நிறுவனங்கள் ஒப்பந்த விதிகளைப் பூர்த்தி செய்யாதபோதும் அவருக்காகவே விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், அவை ஏதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.