சென்னை:
குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்ட 20 பேர் பலியாயினர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வனத்துறையினருக்கு பயிற்சி மற்றும் நவீன கருவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ரூ. 2 கோடி செலவில் இக்கருவிகள் வாங்கப்படும் என்று அவர் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,‘‘ பெரும்பாலான காட்டு தீ மனித தவறுகளால் தான் நடக்கிறது. இது போன்ற சூழ்நிலையை கையாள வனத்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். சென்னை வேளச்சேரியில் இதற்கு தலைமை அலுவலகம் அமைக்கப்படும். மேலும், 125 புதிய ஜீப்கள் ரூ.12.50 கோடி செலவில் வாங்கி வனச் சரகர்களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.