மும்பை

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு வந்த பிரபலங்களுக்கு தலா ரூ. 2 கோடி மதிப்பிலான பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த13-ந் தேதி இரவு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

இந்த திருமணத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். மேலும் ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள், இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தில் கலந்துக் கொட முக்கிய பிரபலங்களுக்கு தலா ரூ,2 கோடிக்கு அதிமான மதிப்புடைய தங்க  கைக்கடியாரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு, நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன், பிரபாஸ், சஞ்சித் கெக்டே, தீ உள்ளிட்ட 25 முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிசாக வழங்கப்பட்ட அந்த கைக்கடியாரம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.  தங்க  கைக்கடியாரம் பரிசு கிடைத்த அனைவரும் ஒன்றாக வாட்ச் அணிந்த கைகளை காட்டும் படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.

,