சண்டிகர்: ரூ. 1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ள  ராகுல்காந்தி மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுதொடர்பாக மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பஞ்சாப்பில் இம்மாத தொடக்கத்தில் சுமார் 40 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இமாச்சல், காஷ்மீரில் மேகவெடிப்பால் சட்லஜ், பியாஸ், ரவி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பஞ்சாப்பிலும் தொடர் கனமழையால் குருதாஸ்பூர், அமிர்தசரஸ், கபுர்தலா, பதன்கோட், ஹோஷியார்பூர், பெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 56 பேர் பலியான நிலையில், 1.98 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகின.

இதையடுத்து,  வெள்ள பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி  பஞ்சாப் சென்றார். அமிர்தரஸ் சென்ற அவர் அஜ்னாலா மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோனேவால் கிராமத்திற்கு சென்றார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, அமிர்தசரஸ் எம்பி குர்ஜீத் சிங் அவுஜ்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்றனர்.

கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து அமிர்தரசின் ராம்தாஸ் பகுதியில் உள்ள குருத்

வாரா பாபா புதா சாஹிப்பில் வழிபாடு செய்த ராகுல் காந்தி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். அவருக்கு சிரோபா எனும் மரியாதை அங்கி வழங்கப்பட்டது. பின்னர் குருதாஸ்பூர் மாவட்டம், தேராபாபா நானக்கில் வெள்ளத்தால் பாதிக்காப்பட்ட குர்சக் கிராமத்தை பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்ட ராகுல், விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக செப்டம்பர்  9ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப்பில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதையடுத்த மத்தியஅரசு,   பஞ்சாப்புக்கு  முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.1,600 கோடி  அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  வெள்ளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள பஞ்சாப் மாநிலதை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மத்தியஅரசு அறிவித்துள்ள நிதி மிகவும் குறைவு, இது அநிதி என்று குறிப்பிட்டுள்ளதுடன்,  பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அவரது கடிதத்தில்,“கடும் மழையால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிர்கள் அழிக்கப்பட்டு உள்ளன. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது  . இதனால் முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு சிப்பாக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தியா அவர்களுடன் நிற்கிறது என்பதை நாம் உறுதியளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு நாம் ஒன்றிணைந்து அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க வேண்டும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.