சென்னை:
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.
எங்களின் திட்டத்திலிருந்து கசிந்த தகவலை தெரிந்துக்கொண்டு திமுக உரிமைத்தொகை அறிவித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
[youtube-feed feed=1]