சென்னை: நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் பெரும்பாலும் நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. இதற்கு ஊழலே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ரேசன் கடைகள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

இதையடுத்து கூட்டுறவு சங்க அதிகாரிகளின் பதவி காலத்தை 3ஆண்டுகளாக குறைத்து, தமிழக அரசு சட்ட திருத்த மசோதாவை நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் பதவி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து,  கூட்டுறவு சங்கங்களின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.