சென்னை:

ரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ.14.54 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை கண்டிட காண்டிராக்டருக்கு சொந்தமான  சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்பட  அவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் முதலாளிகள்  தமிழக முதல்வருக்கு எடப்பாடிக்கும்  நெருக்கமானவர்கள் என்பதும்,  தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் வரும் அனைத்து கட்டிப்பணிகள்,  நெடுஞ்சாலை களை பணிகளை  டெண்டர் எடுத்து வரும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து,  பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் தொடர்புடைய தமிழகம் முழுவதும் உள்ள  7 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   நாமக்கல்லில் 4 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்,  நாமக்கல்லை அடுத்த நடுக்கோம்பையில், பிஎஸ்கே உரிமையாளர் பெரியசாமியின் வீடு, அலுவலகத்தில் 5 அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நாமக்கல்-சேலம் சாலையில், பிஎஸ்கே நிறுவனத்தோடு தொடர்புடைய செல்வம் என்பவரது அலுவலகத்திலும் உள்பட  ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி  ஆகிய 2 ஃபைனான்சியர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 14 கோடியே 54 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளது.

இந்த பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டில், வேலூருக்கு அடுத்து, மிகப்பெரிய அளவிலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது பிஎஸ்கே குழுமத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.