மும்பை: மகாராஷ்டிரா மாநில காவல்துறை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர வேண்டும் என்று கூறிய மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிப்பொருட்களுடன் கார் சிக்கிய வழக்கு, அதைத்தொடர்ந்து காரின் உரிமையாளர் மர்ம மரணம் போன்றவை மாநி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பிரச்சினை தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பலிகடாவாக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் கோபமடைந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பகிரங்கமாக புகார் கூறி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், வெடிகுண்டு கார் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே உள்பட அமைச்சர் அனில் தேஷ்முக் என ஏராளமான குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்ல. அதையடுத்து, அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரடப்பட்டது. இதனால் அனில் தேஷ்முக் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீதான முறைகேடு புகார் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக குற்றச்சாட்டு கூறிய மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே, துணை போலீஸ் கமிஷனர் ராஜூ புஜ்பால், உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாட்டீல், வக்கீல் ஜெயஸ்ரீ பாட்டீல் மற்றும் ஓட்டல் உரிமையாளர் மகேஷ் ஷெட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சசர் அனில் தேஷ்முக்கின் நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, நேர்முக செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரிடம் விசாரணை ந நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நேற்று அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி தொடங்கியது. அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான சி.பி.ஐ. அதிகாரி தலைமையில் விசாரணை நடந்தது. 8 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. தொடர்ந்து இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.