தஞ்சை:
தஞ்சை பெரிய கோயிலில் மாயமான ராஜராஜ சோழன் சிலை குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிலைகள் மாயமானது குறித்து முன்னாள் அமைச்சர் சாமிநாதன் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் மாயமானது உறுதியாகியுள்ளது. மாயமான ராஜராஜ சோழன் சிலை, லோகம்மாள் சிலை உள்பட 13 சிலைகள் விரைவில் மீட்கப்படும் என ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
ரூ.100 கோடி மதிப்பிலான இந்த குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அருங்காட்சியத்தில் உள்ள சிலைகளை மீட்க குஜராத் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.