சென்னை:
திருச்சியில் இறந்த உஷா குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கமல் அறிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் சார்பில் சென்னையில் கூட்டம் நடந்தது. இதில் கமல் பேசுகையில், ‘‘ தாய் சொல்லை தட்டாதவன் நான். அதனால் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம் தான் அகிம்சை. தமிழகத்தின் நலன், வளம் தான் எங்களது முதல் கொள்கை.
எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன். 180 நாளில் கட்சி கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும். தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்துள்ளனர்.
திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுசாவடி என்பது கோயில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் கூட்டணி கிடையாது என்பது சத்தியம்’’ என்றார்.
[youtube-feed feed=1]