சென்னை: தலைமை செயலகத்தில் மரம் விழுந்து மரணமடைந்த பெண் காவலருக்கு ரூ.10 நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பெய்துவரும் மழை காரணமாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே உள்ள பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் உள்பட பெண் காவலரும் சிக்கினர். 2 கார்கள் சேதமடைந்துள்ளன இதில், போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், பெண் காவலர் உயிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு தலைமை செயலாளர் இறையன்பு , டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்தனர். விழுந்த மரம் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இ
துகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் இரங்கல் பெண் காவலரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (2:11.2021) காலை சுமார் 9.00 மணியளவில் தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கே காவல் பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் திருமதி கவிதா அவர்கள் மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன் பணியிலிருக்கும் போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்த திருமதி.கவிதா அவர்களின், குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.