டெல்லி:

டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்பு சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லி துக்ளகாபாத் கன்டெயினர் குடோனில் வருவாய் புலனாய்த் துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கன்டெயினரில் பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் இருந்தன.

அவற்றை விலக்கி பார்த்த போது உள்ளே ஏராளமான சீனப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியாகும். இந்த பட்டாசுகளை பஞ்சாப்பை சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது தெரியவந்தது.
கடந் தீபாவளி பண்டிகை அன்று சீன பட்டாசுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் மத்திய அரசு பக்கம் பக்கமாக நாளிதழ்களில் விளம்பரம் செய்தது. ஆனால் தலைநகர் டெல்லியிலேயே இவ்வளவு அதிகமான சீன பட்டாசுகள் குவித்து வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே நாட்டின் தலைநகரான டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் உச்சநீதிமன்ற தடை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.