திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தில் ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 கார்களில் சென்றவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக சேலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.