இப்பத்தான் பேஸ்புக் பாத்துக்கிட்டிருந்தப்ப கவனிச்சேன். தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்துல, “உறவுகளே! கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப்படை ஆதரவை தெரிவித்தோம். 19:07:2016 இன்று அந்த ஆதரவு நிலையை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்” அப்படின்னு பதிவிட்டிருந்தாங்க.
வாயாலேயே வட சுடுறதுன்னு சொல்லுவங்கள்ல.. அதுமாதிரி பேஸ்புக்லயே புரட்சி பண்ணி, கட்சி ஆரம்பிச்சி வைகோவின் மதிமுகவோட கூட்டணியும் வச்சி.. அதே கட்சி சின்னத்துல பல்லாவரத்துல நின்னு பத்தாயிரம் ஓட்டுக்கள் மேல வாங்கினவங்க இவங்க! (கே.ந.கூட்டணியால அதிகமா பலனடஞ்சது இவங்களாத்தான் இருக்கும்!)
இதுல காமெடிபிலிட்டி என்னன்னா… வைகோவை, “தெலுங்கு கொல்ட்டி” “வந்தேறி” அப்படின்னு எல்லாம் விமர்சிச்சவர்தான் இந்த வீரலட்சுமி. தீவிரத் தமிழ்த்தேசியரு(!). பட், ஒன் ஃபைன் மத்தியானம் வைகோவோட கூட்டணி சேர்ந்தாரு. கேப்டன் நலக்கூட்டணி தலைவர்களையும் சந்திச்சாரு. அதோட தன் தீவிரத்தமிழ் தேசிய (!) கருத்துக்களை விட்டுட்டாரு.
இந்த நிலையிலதான் வீரலட்சுமி இன்னைக்கு, “ம.ந.கூவிலிருந்து விலகுகிறேன்”னு பேஸ்புக்ல அறிவிச்சிருக்காங்க. அதுவும் வணக்கம் வச்சமாதிரி போஸ்கொடுத்து அருமையான படத்தோடு பதிவு போட்டுருக்காங்க.. அசத்தல்!
அதை படிச்சுட்டு ஆசிரியர்கிட்ட “செய்தி போடுங்களேன் சார்”னு சொன்னேன்.
“நீயே உன் பக்கத்துல எழுதிக்கடா”னு சொல்லிட்டாரு!