தமிழக கவர்னர் மாளிகையில் நடந்த சல்லாபம்!

தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சண்முகநாதன், மேகாலயா கவர்னராக இருந்து பாலியல் புகார் காரணமாக பதவி விலகியிருக்கிறார் அல்லவா? அம்மாநில ஆளுநர் மாளிகையையே அந்தப்புரமாக ஆக்கிவிட்டார் என்பதுதானேஅவர் மீதான பகீர் குற்றச்சாட்டு?

இது குறித்து பேசிய நண்பர் சரவணனிடம், “ஆந்திர கவர்னர் என்.டி. திவாரி மீதும் இப்படியான குற்றச்சாட்டு வந்து பதவி விலகினாரே…” என்றேன்.

அதற்கு சரவணன்,” அந்தப்புரம் ஆகும் ஆளுநர் மாளிகைகள் வரிசையில், தமிழகம் எப்போதோ இடம் பிடித்துவிட்டதே” என்று பழைய சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தினார்.

பலரும் மறந்துவிட்ட விசயம்தான் அது. இதோ, சரவணன் மொழியிலேயே…

“1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார் சந்திரசேகர்.   அவருடைய அமைச்சரவையில்  தகவல் ஒளிபரப்புத் துறையின் தனி பொறுப்பு மந்திரியாக பதவி வகித்தவர் சுபோத்கான் சகாய்.

கிண்டி ஆளுநர் மாளிகை

அந்த காலகட்டத்தில்,  சென்னையில்  நடைபெற்ற  தூர்தர்ஷன்  விழாவில்  கலந்து  கொள்ள  வந்த  அவர் ,  அன்று  இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தங்கினார்.

அன்றைய இரவில் அவரை “மகிழ்விக்க” தூர்தர்ஷன் தொடர்புடை “குட்டி”யான நடிகை,   பல கோடம்பாக்கத்து கிளிகளை ராஜ்பவனுக்குள் அனுப்பி வைத்தார்.  அந்த கிளிகளில் இருவரை மட்டும்   தேர்வு  செய்து  மற்றவர்களை  திருப்பியனுப்பினார்  நேர்மையான அமைச்சரான  சகாய்.

சகாய்

கிளிகளை அழைத்துப் போனவர்கள், அதற்கு முன்பாகவே தங்களது காரைக்  கிளப்பிக்  கொண்டு  போய்விட்டார்கள்.  ஆகவே, . ‘தேர்வில்’ தோல்வியடைந்து வெளியேற்றப்பட்ட “கிளிகள்”   அந்த இரவு நேரத்தில் திரும்பிச் செல்ல கார் இல்லாமல் ராஜ்பவன் வாசலுக்கு வந்து நின்று… காத்திருந்தனர். பிறகு,  எங்கிருந்தோ வந்த அம்பாசிடர்களில் ஏறி போனார்கள்.

இந்தத் தகவல் பத்திரிகையாளர்கள் சிலருக்குத் தெரியவர..  செய்தியாக வெளியாகிவிட்டது.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, இது குறித்தும் கேட்டுவிட்டார்கள் சில செய்தியாளர்கள்.

அதற்கு கருணாநிதி,  “ராஜ்பவன்  என்பது  மரியாதைக்குரிய  இடம்.  இ்ப்போது  கேள்விப்பட்ட  விஷயத்தை  நினைக்கும்போது  வருத்தமாகத்தான்  இருக்கிறது..  நல்லவைகளை பாழாக்குவதற்கு  அரசியல்  சட்ட  பதவிகளை  யாரும்  பயன்படுத்தக்  கூடாது..”  என்று  பதில்   அளித்தார்.

ஆக, அந்தப்புர வரிசையில் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், ஏற்கெனவே இடம் பிடித்துவிட்டது” என்றார் சரவணன்.

ஹும்.. என்னத்தைச் சொல்ல..?

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: romance in Tamil Nadu Governor House, தமிழக கவர்னர் மாளிகையில் நடந்த சல்லாபம்!
-=-