லண்டன்: இந்திய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டியில், ரோகித் ஷர்மா ஆட்டமிழந்த விதம் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கினர் ரோகித்தும் ராகுலும். ஆனால், ரோகித் 18 ரன்கள் அடித்திருந்தபோது, கேமர் ரோச் போட்ட பந்தை அடிக்க ரோகித் முயல, அது காலுக்கும் பேட்டிற்கும் இடையில் சென்றது.
மேற்கிந்திய தீவுகள் அவுட் கேட்க, நடுவர் அவுட் கொடுக்கவில்லை. எனவே ரிவ்யூ சென்றனர் அவர்கள். ரிவ்யூ செயல்பாட்டில் பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? என்பதை தெளிவாக கணிக்க முடியவில்லை என்றாலும்கூட, சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்காமல், அவுட் கொடுத்தார் மூன்றாவது நடுவர். இந்த முடிவுதான் தற்போது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.