சென்ன‍ை: இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தற்போது வரை நாட்அவுட்டாக இருக்கும் துவக்க வீரர் ரோகித் ஷர்மா, 153 ரன்களை எடுத்து ஆடிவருகிறார். அவர் இரட்டை சதமடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தற்போதுவரை 219 பந்துகளை சந்தித்துள்ள ரோகித் ஷர்மா, 2 சிக்ஸர்கள் & 18 பவுண்டரிகளுடன் 157 ரன்களை விளாசியுள்ளார். மறுபக்கம், 135 பந்துகளை சந்தித்துள்ள ரஹானே, 8 பவுண்டரிகளுடன் 59 ரன்களை அடித்து ஆடிவருகிறார்.

தற்போது குளிர்பான இடைவேளை. 3வது செஷன் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்திற்கு, இன்னும் 20 ஓவர்கள் பாக்கியுள்ள நிலையில், இந்த ஜோடி அப்படியே நிலைத்து நின்றால், இந்தியா முதல்நாளில் 300 ரன்களைத் தாண்டும் என்று கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணி மொத்தமாக 6 பெளலர்களைப் பயன்படுத்திப் பார்த்தும், ரோகித் – ரஹானே ஜோடியை அவர்கள் இதுவரை பிரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.