பெங்களூரு: உடற்தகுதி பரிசோதனையில், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா தேறிவிட்டதால், டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இவர் விரைவில் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின்போது, ரோகித் ஷர்மாவுக்கு தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலிய பயணத்திற்கான இந்திய ஒருநாள் & டி-20 அணியில் அவர் இடம்பெறவில்லை. அதேசமயம், இந்திய டெஸ்ட் அணியில் 3 போட்டிகளுக்கு இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வந்தார் ரோகித்.

அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உடற்தகுதிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப் பரிசோதனையில் ரோஹித் சர்மா தேறிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியுள்ளதாவது; ரோஹித் சர்மா கடந்த 20 நாட்களாக எடுத்த தீவிரப் பயிற்சி, பரிசோதனையில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றுவிட்டார். அடுத்த போட்டிகளுக்கும் அவர் தயாராக இருக்கிறார்.

அவரின் உடல்நிலை குறித்த அறிக்கையை பிசிசிஐ அமைப்பிற்கும், தேர்வுக் குழுவுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். எப்போது ரோஹித் ஷர்மாவை ஆஸ்திரேலியாக்கு அனுப்பி வைக்கலாம் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் ஷர்மா, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில், அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. 3வது டெஸ்ட் போட்டியிலிருந்துதான் ரோஹித் ஷர்மா பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]