புதுடெல்லி:
இந்திய கடல் பகுதியில் சிக்கி தவிக்கும் அகதிகளை காப்பாற்ற மீட்க ஐநா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பிராந்திய கடலுக்குள் 90 ரோகிங்கியா அகதிகள் மற்றும் மூன்று பங்களாதேஷ் பணியாளர்களைக் கொண்ட ஒரு படகு சென்றது. இதில் 65 ரோஹிங்கியா பெண்கள், 20 ஆண்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் சென்றுள்ளனர்.
6 நாட்களுக்கு முன்பு இந்த படகின் இயந்திரங்கள் செயல்படுவதை நிறுத்தியதால், அது அந்தமான் தீவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஐநா சபை மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து அவர்களை விரைவில் மீட்குமாறு கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. ஆனால் தற்போது அந்தமானில் உள்ள இந்திய கடற்படையினர் அல்லது கடலோர காவல்படையினர்களால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.