அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’.

இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கைப்பற்றியுள்ளது. விக்னேஷ் சிவன் – அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.