நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’படம் உருவாகியுள்ளது .
இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் மற்றும் மாதவன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறாராம். சூர்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகர் ஷாருக் கான் நடிக்க உள்ளாராம் .
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், ‘ராக்கெட்ரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.