சாலைகளில் செல்லும் கன்டெய்னர் லாரிகளை மடக்கிப்பிடித்து கொள்ளயடிப்பது வழக்கமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று மெக்ஸிகோ.

ஆனால், ஜீன் மாதம் இங்குள்ள மன்சேனில்லா துறைமுகத்தில் நடைபெற்ற கொள்ளை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை என்று அந்நாடினரால் வர்ணிக்கப்படுகிறது.

மன்சேனில்லா துறைமுகத்திற்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு பணியில் இருந்த காவலர்களை கட்டிப்போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்களை ஒவ்வொன்றாக தேடி அதில் தங்கம், வெள்ளி அடங்கிய 20 கன்டெய்னர்களை கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றி சென்றனர்.

அந்த கன்டெய்னர்களில் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுத்த அதிகம் சுத்திகரிக்ப்படாத தங்கம் மற்றும் வெள்ளி இருந்ததாகக் கூறப்படுகிறது.

தவிர மெக்சிகோ கள்ளச்சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்ற எல்.இ.டி. டிவி-கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அடங்கிய கன்டெய்னர்களையும் தூக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தோட்டா எதுவும் வீணாகாமல் சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்த கொள்ளை சம்பத்தில் கொண்டு சென்ற தங்கம் வெள்ளி ஆகியவற்றை கொள்ளையர்கள் எப்படி சுத்திகரிப்பார்கள் என்றும் சுத்திகரிப்பு ஆலைகள் இதனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் புரியாமல் விழிபிதுங்கியுள்ளது மெக்சிகோ காவல்துறை.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடம் கடற்படையின் எல்லைக்குள் வராது என்பதால் காவல்துறை மேலும் குழம்பியுள்ளதாக கூறப்படுகிறது.