அமிர்தசரஸ்:

ஞ்சாபில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் உள்ள கிணற்றில் போடப்பட்டுள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது, ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது.

பிரிட்டிசாரின் காட்டுமிராட்டித்தனமான துப்பாக்கி சூட்டுக்கு இரையான சோக சம்பவம் நடைபெற்ற பகுதி பஞ்சாபின் ஜாலியான் வாலாபாக் நினைவிடம்.

1919ம் ஆண்டு ஏப்., 13ம் தேதி இங்குள்ள மைதானத்தில் குழுமி இருந்த மக்கள் மீது, ஜெனரல் டயர் தலைமையில் வந்த பிரிட்டிஷ் வீரர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஏராள மானோர் வீர மரணம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்ற ஏராளமானோர் அங்குள்ள கிணற்றில் குதித்து ஏராளமானோர் இறந்தனர்.

இந்த ஜாலியன்வாலாபாக் நடைபெற்ற கிணற்றில், அதை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள கிணற்றில் பணம், காசுகள் போடுவது வழக்கம். அவ்வாறு மக்கள் போட்டு சென்ற பணத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளனர்.

பாதுகாப்பாக உள்ள அந்த பகுதியில், கிணற்றின் மீது போடப்பட்டிருந்த கிரிலை உடைத்து, கிணற்றினுள்  இருந்த பணம் மற்றும் நாணயங்களை எடுத்து சென்று விட்டனர்.

இது குறித்து அந்த பகுதியின் காவலாளி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.