‘தாரை தப்பட்டை’. படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானவர் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆர்.கே.சுரேஷ்.
சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்து, அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்காக ‘குருபூஜை’ எனத் தலைப்பிடப்பட்ட கதை விவாதப் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் ‘குருபூஜை’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.