பிரிட்னின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராவது உறுதி எனக் கூறப்படுகிறது.

லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி எழுந்த நிலையில் கரிபியன் தீவில் விடுமுறையை அனுபவித்து வந்த ஜான்சன் சனிக்கிழமையன்று லண்டன் திரும்பினார்.

ஜான்சன் மீண்டும் பிரதமராவதற்கு 100 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர் இதனையடுத்து தேர்தலில் போட்டியிட மனுசெய்வார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தான் சுதந்திரமாக பணியாற்ற முடியாது என்பதை உணர்ந்த போரிஸ் ஜான்சன் நாட்டின் தற்போதைய சவாலை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரிஷி சுனக் பிதமராக தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.