பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 58.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ராஜிவ் கபூர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராஜிவ் கபூர். சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ராஜிவ் கபூர் பிரேம்கிராந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அவரது மரணத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.