கத்தார்:
லக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றதை அடுத்து, பெல்ஜியம் மற்றும் டச்சு நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

கத்தார் உலக கோப்பையில் இன்று குரூப் எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

இறுதியில் ஆட்டநேர முடிவில் மொரோக்கோ அணி 2-0 என்ற முன்னிலையில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை மோதலின் போது மொராக்கோ அணி பெல்ஜியத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்ததை அடுத்து பல பெல்ஜியம் மற்றும் டச்சு நகரங்களில் கலவரம் வெடித்தது.

பிரஸ்ஸல்ஸில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர், அத்துடன் டஜன் கணக்கான பேரை போலீசார் கைது செய்தனர்.