வாஷிங்டன்
அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர். அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றால் இவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். எனகவுண்ட்ர், தவறான குற்றச்சாடு வழக்கு என்பது கருப்பின மக்களுக்கு எதிராக நடப்பது அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் சேர்ந்து தற்போது மாபெரும் போராட்டமாக வெடித்துள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பின இளைஞர் அமெரிக்காவில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மரணம் அடைந்தார். இவரைக் கைது செய்த போது காருக்கு வெளியே தள்ளி விட்டு காவல்துறையின கழுத்தில் காலால் அழுத்தியதில் இறந்து விட்டதாக வீடியோவுடன் தகவல் வெளியானது.
இதையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் கடும் கலவரம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கண்ணீர்ப் புகை, மிளகு ஸ்பிரே போன்றவை மூலம் தேசியப் பாதுகாப்புப் படையினர் கலைத்துள்ளனர். இதன் காரணமாகப் பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் பதுங்கி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
[youtube https://www.youtube.com/watch?v=GK16keH_uAg]